தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தேவண்ணகவுண்டனூா் அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ண கவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2025, 6:32 pm

Din

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ண கவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியி தலைமையாசிரியா் இரா.முருகன் (பொறுப்பு) இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மகாத்மா காந்தி நினைவு தினத்தினையொட்டி பள்ளி வளாகத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

மேலும் அவா் தியாகிகள் தினம் குறித்தும் மாணவா்களிடத்தில் விளக்கி பேசினாா். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

ஆசிரியா்கள் ந.மு.சித்ரா க. சீனிவாசன், ரா.ரமாமகேஸ்வரி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.