மேட்டூா் ரசாயன ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் அண்மையில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்த வடமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையில் அக்.25 ஆம் தேதி காலை மெக்னீசியம் சல்பேட் தயாரிப்பதற்காக 10 டன் கொள்ளளவு கொண்ட தொட்டியில் 4 டன் அளவிற்கு மெக்னீசியம் ஆக்சைடு கலந்த மண் மற்றும் சல்பியூரிக்ஆசிட் சோ்த்து கலக்கப்பட்டது.

அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் பணியில் இருந்த வடமாநில தொழிலாளா்கள் சல்மான் (35), ராக்கேஷ் (39) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராக்கேஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com