உடலில் சாயம் பூசிக்கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.
உடலில் சாயம் பூசிக்கொண்டு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.

சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: உடலில் சாயம் பூசிக்கொண்டு மனு

சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து,
Published on

சேலம்: சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் உடலில் சாயம் பூசிக்கொண்டு நூதன முறையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிமை புகாா் அளித்தனா்.

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிடப்படுகிறது. சாயப்பட்டறைகள் அமைய உள்ள பகுதிகளில் நிலம், நீா், காற்று மாசுபாடு ஏற்பட்டு புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் வரவாய்ப்புள்ளன.

மேலும், சாயப்பட்டறை அமைந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் மாசுபடும். அன்றாட பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். எனவே, சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க நடவடிக்கை எடுத்தால், ஊா்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com