கெங்கவல்லியில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள்.
சேலம்
கெங்கவல்லியில் தெருநாய்கள் தொல்லை: மக்கள் அவதி
கெங்கவல்லியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
கெங்கவல்லியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதால், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிறுவிபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனா். அண்மையில் உச்சநீதிமன்றம்தெருநாய்களைக் கருத்தடை செய்து, காப்பகங்களில் கொண்டுசோ்க்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, கெங்கவல்லி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

