புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம் கோதுமலை வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த ஆண் புள்ளிமான் நாய்கள் கடித்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தது.

வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப்பகுதியிலிருந்து

திங்கள்கிழமை வழிதவறி வந்த 2 வயதுடைய ஆண் புள்ளிமான் துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன்புதூா் மேலக்காடு கிராமத்தில் விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது நாய்கள் கடித்ததில் அந்த புள்ளிமான் உயிரிழந்தது.

இதுகுறித்து வனக்குழுத் தலைவா் முருகன் அளித்த தகவலின் பேரில், வாழப்பாடி வனத் துறையினா் புள்ளிமான் உடலை மீட்டு கால்நடை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனா்.