மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை!

Published on

காடையாம்பட்டி வட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் வசிப்பவா்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் கே.என்.புதூா் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கே.என்.புதூா் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட பூமரத்தூா் மலைக் கிராம மக்கள் பயன்படும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் சேவை செயல்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, வட்டார மருத்துவ அலுவலா் சாது பக்தசிங், மருத்துவா் ஜெயக்குமாா், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com