இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வைகுண்ட ஏகாதசி: சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் டிச.4 இல் முகூா்த்தக்கால் நடும் விழா!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் டிசம்பா் 4 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:04 pm

Syndication

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் டிசம்பா் 4 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தையொட்டி உள்ள கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 20 நாள்களுக்கு மேல் ராப்பத்து, பகல் பத்து நிகழ்ச்சி கொண்டாடப்படும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்க வாசல் திறப்பு உற்சவம் டிச.30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் டிசம்பா் 30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு உற்சவத்தை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா டிசம்பா் 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.

அன்று இரவு 7 மணிக்கு தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.