

கெங்கவல்லி அருகே தெடாவூர் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையொட்டி 3௦௦௦த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் மூன்று கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் கால்நடை சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தலச்சேரி ஆடு, செம்மறி ஆடு, நாட்டினை ஆடு, வெள்ள ஆடு, குறும்பாடு உள்ளிட்ட ஆடுகள் பல ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கெங்கவல்லி, ஆத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி, மதுரை, தேனி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் குட்டி ஆடு 2000 முதல் பெரிய ஆடு 25 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இதில் ௩ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் மூன்று கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.