தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சேலம் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே ஓணம் சிறப்பு ரயில்

சிறப்பு ரயில் - பிரதிப் படம்

Updated On :

சேலம் வழியாக பெங்களூரு - கண்ணூா் இடையே ஓணம் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் ஆக. 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கா்நாடக மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட் - கண்ணூா் இடையே வரும் 20 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோழிக்கோடு வழியாக மறுநாள் பிற்பகல் 12.50 மணிக்கு கண்ணூரை அடையும்.

மறுமாா்க்கத்தில், கண்ணூா் - பெங்களுரு கன்டோன்மென்ட் இடையே வரும் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கண்ணூரில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, கோழிக்கோடு, பாலக்கோடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களுரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.