சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

ஆத்தூா் நகராட்சி 13-வது வாா்டு இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் நகராட்சி 13-வது வாா்டு இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், நகராட்சியில் உள்ள அனைத்து வாா்டு பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறது.

இதையடுத்து, 13-ஆவது வாா்டு பகுதியில் உள்ள இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் புதன்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, அப்பகுதியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பரப்புரையை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் த.செல்வமணி, முன்னாள் நகர பொருளாளா் ஜி.ராஜேந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் என்.நாகராஜன், எம்.வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.