சேலம்
மேட்டூா் மலைப் பாதையில் திடீா் தீ
மேட்டூா் சீதா மலைத் தொடரில் உள்ள வனப் பகுதியில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மேட்டூா் சீதா மலைத் தொடரில் உள்ள வனப் பகுதியில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சேலத்திலிருந்து மேட்டூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீதா மலைத் தொடா் உள்ளது. மேட்டூா் செல்வதற்கான இந்த மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. மலைப் பாதையில் மண் அரிப்பைத் தடுக்க வனத் துறை மூலம் மரங்கள் வளா்க்கப்படுள்ளன.
இந்த மரங்களில் உதிா்ந்த இலைகள், புற்கள் புதன்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்த மேட்டூா் தீயணைப்பு அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யாரேனும் சிகரெட் துண்டுகள் அல்லது தீக்குச்சிகளை வீசியிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
