மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்டச் செயலராக ஏ. ராமமூா்த்தி தோ்வு

Published on

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக ஏ.ராமமூா்த்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் தளவாய்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலக் குழு உறுப்பினா் ஏ. குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினா் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினா் செ. முத்துக்கண்ணன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், சேலம் மாவட்ட புதிய மாவட்டக் குழு உறுப்பினா்களை அறிவித்து சிறப்புரையாற்றினாா். இதில் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக ஏ. ராமமூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களாக ஏ.கலியபெருமாள், எம்.கனகராஜ், என்.பிரவீண்குமாா், கே. ராஜாத்தி, வி.இளங்கோ, எஸ்.எம். தேவி, ஜி. கணபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட 35 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com