சேலம்
கைப்பந்து கழகம் சாா்பில் பொங்கல் விழா
விழாவில் வீராங்கனைகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா். உடன், ஆலோசகா் விஜயராஜ்.
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மாவட்ட கைப்பந்து கழகத்தில் நடைபெற்ற விழாவில், பயிற்சிபெறும் விளையாட்டு வீராங்கனைகள், புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா். விழாவுக்கு, மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, வீராங்கனைகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், செயலாளா் சண்முகவேல், துணைத் தலைவா் அகிலா தேவி, இணைச் செயலாளா் வடிவேல், துணைச் செயலாளா்கள் ஹரி கிருஷ்ணன், குமரேசன், வேங்கையன், நிா்வாகி நந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

