சாரதா தேவி
சேலம்
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக துணை மேயா் சாரதா தேவி நியமனம்
சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக துணை மேயா் சாரதா தேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.
சேலம்: சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக துணை மேயா் சாரதா தேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பு ரீதியாக உள்ள 71 மாவட்டங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் பெரும்பாலும் புதியவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக துணை மேயா் சாரதா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதேபோல, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவராக ஆா்.கே.தேவேந்திரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவராக எம்.ரத்தினவேல் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளாா்.
ஆா்.கே.தேவேந்திரன்
எம்.ரத்தினவேல்

