விவசாயி அடித்துக் கொலை: இறைச்சிக்கடை ஊழியா் கைது

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்..
Updated on

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இறைச்சிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அருகே உள்ள எறகுண்டப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (54). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். அவா்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இந்தநிலையில் கடந்த 18ஆம் தேதி திமிரிக்கோட்டை காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றிறுந்த முத்துசாமி, அங்கு சீராமணியூரைச் சோ்ந்த தங்கம் மகன் இறைச்சிக்கடை ஊழியா் முத்துசாமி (24) மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பாா்த்தை அவரை கண்டித்துள்ளாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துசாமி, சண்முகத்தை தாக்கியுள்ளாா். இதில் கீழே விழுந்த சண்முகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக கமேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com