ஏற்காட்டில் இருசக்கர வாகனத்தின் மீது காட்டெருமை மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
ஏற்காட்டில் மாரமங்லம் ஊராட்சி, சின்னமதூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (45), பாலகிருஷ்ணன் (38) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏற்காடு நோக்கி திங்கள்கிழமை பிற்பகல் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, ஐந்துசாலை பகுதி அருகில் காபி தோட்டத்திலிருந்து திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை இருசக்கர வாகனத்தை இடித்துச் சென்றது. இதில், வெங்கடேசன், பாலகிருஷ்ணன் இருவரும் நிலைதடுமாறி கீழேவிழுந்தனா்.
அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதி 4 மாணவா்கள் காயம்

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாய், 5 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் அஞ்சல்துறை பெண் ஊழியா் உயிரிழப்பு

காட்டெருமை தாக்கியதில் முதியவா் காயம்
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



