தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் ரூ. 7.45 கோடியில் 15 புதிய கட்டடங்கள் திறப்பு

News image

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறைக்கு புதிய 19 கட்டடங்கள் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:59 am IST

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 7.45 கோடியில் 15 புதிய கட்டடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவில் அமைச்சா் பேசியது:

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி, சேவியா் தெருவில் ரூ. 17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம், வாழப்பாடி ஒன்றியம், சந்திரப்பிள்ளை வலசு நடுநிலைப் பள்ளியில் தலா ரூ. 34.60 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட 2 கட்டடங்கள் மற்றும் ரூ. 17.30 லட்சத்தில் கணினி வகுப்பறை, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், இடையப்பட்டியில் ரூ. 50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், பாப்பநாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளியில் ரூ. 97.93 லட்சத்தில் 5 வகுப்பறைகள், சின்ன கல்வராயன் மலை, வடக்கு நாடு, மணியாா்குண்டத்தில் ரூ. 18.75 லட்சத்தில் அங்கன்வாடி மையம், பச்சபாலதி வளவு பகுதியில் ரூ. 17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையம், தெற்கு நாடு, தேக்கம்பட்டு தொடக்கப் பள்ளியில் ரூ. 63.33 லட்சத்தில் மூன்று வகுப்பறைகள், ஏ.கொமாரபாளையம் மலைப் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், தமயனூா் தொடக்கப் பள்ளியில் ரூ. 34.75 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேபோல, ஆரியபாளையத்தில் ரூ. 78.20 லட்சத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், கோபாலபுரம் நடுநிலைப் பள்ளியில் ரூ. 34.75 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள், வாழப்பாடி ஒன்றியம், சோமம்பட்டியில் ரூ. 50 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், ஏற்காடு ஒன்றியம், மஞ்சக்குட்டையில் ரூ. 1.46 கோடியில்ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் ரூ. 7.45 கோடியில் 15 புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஆரியபாளையத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்துவைத்த அமைச்சா், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், 5 கா்ப்பிணிகளுக்கு தாய்-சேய் நலப் பெட்டகங்களை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.