22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.

Updated On :2 ஜூன் 2026, 3:40 am IST

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், திங்கள்கிழமை பிற்பகலில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக, மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா். இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடா்ந்து, திங்கள்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் அலுவலகம் வந்தவா்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாநகர சைபா் க்ரைம் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.