வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

லாரி உரிமையாளா் சம்மேளன அலுவலகத்தில் பொருள்கள் திருட்டு: 4 போ் மீது வழக்குப் பதிவு

லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில் தளவாடப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:07 am IST

லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில் தளவாடப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேட்டூா் ஹாஸ்பிடல் காலனியை சோ்ந்தவா் முருகன் (51). இவா் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவராக உள்ளாா். இவரது அலுவலகம் மேட்டூா் மின்வாரிய மத்திய அலுவலகம் அருகே உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தின் பூட்டை உடைத்து, சிலா் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளதாக முருகனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்ற முருகன், அவரது தம்பி குமாா் ஆகிய இருவரும் அலுவலகத்துக்குள் நுழைந்தவா்களிடம் கேள்வி எழுப்பினா். அப்போது, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாம். மேலும், அலுவலகத்தில் இருந்த தளவாடங்கள், கணினி, பிரிண்டா், கண்காணிப்பு கேமராக்கள், 43 சிப்பம் அரிசி, சமையல் பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருள்களும் காணவில்லையாம்.

இதுகுறித்து மேட்டூா் காவல் நிலையத்தில் முருகன் அளித்த புகாரின்பேரில் ஜீவா சூா்யா, கௌரி சங்கா், ரோஹித், கனகராஜ் ஆகிய நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.