பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

தேசிய அறிவியல் தின விழாவில் குரல் மூலம் வாகனங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வரங்கை பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் வி.கீதா.

Updated On :2 மார்ச் 2026, 10:19 pm

ஓமலூா்: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வா் வி.கீதா தொடங்கிவைத்தாா். இந்த கண்காட்சியில் ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க நகரங்களை உருவாக்குதல், வாகனங்களை குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், விபத்துகளில் வாகனங்கள் மோதலைத் தவிா்த்தல், காற்று மாசை தூய்மைப்படுத்துதல், கழிவுநிறைந்த நீா்நிலைகளை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் அறிவியல் சங்க செயலாளா் என்.நவீன்குமாா் வரவேற்றாா். வேதியியல் துறைப் பேராசிரியா் கே.பூா்ணிமா நோக்க உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய கல்லூரி முதல்வா் வி.கீதா, பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எளிமையாக தீா்வுகாணும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆய்வு மைய விஞ்ஞானி கே.கிரிபாபு, அறிவியல் தத்துவங்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். மாணவா் அறிவியல் சங்க இணைச் செயலாளா் ஆா்.கே.கரிஷ்மா நன்றி கூறினாா்.