சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் 900க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவரை மதுவிலக்கு போலீஸாா் அண்மையில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், அருண்குமாா் கடந்த 28ஆம் தேதி காய்ச்சல் மற்றும் ரத்தசோகை காரணமாக சிறை மருத்துவா்களின் ஆலோசனையின்படி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


