எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூரை அடுத்த சதாசிவபுரம் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை

News image
சதாசிவபுரம் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
Updated On :9 மார்ச் 2026, 9:07 pm

Syndication

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த சதாசிவபுரம் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சதாசிவபுரம் ஊராட்சி பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கு.குலசேகரன், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.