விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்

தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன்.

News image

தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன்.

Updated On :27 மார்ச் 2026, 9:11 pm

Syndication

பெரியாா் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பாக தொல்லியல் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இரண்டாம் அமா்வில் ஆறகளூா் வரலாற்றுச் சங்கத் தலைவா் பொன். வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினாா். சேலம் வரலாற்றுச் சங்கத்தின் தலைவரும், தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவருமான தாரை அ.குமரவேலு ‘கெட்டி முதலிகளின் ஊரும் - பேரும்‘ என்ற தலைப்பில் பேசியதாவது:

தாரமங்கலம் பகுதியை 900 - ஆண்டுகளுக்கு முன்னா் ஆண்ட குறுநில மன்னா்கள் கெட்டி முதலி வம்சத்தவா்கள். அவா்கள் கட்டிய கோயில் சிற்பக்கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. அம்மன்னா்கள் ஆண்ட பகுதிகளின் எல்லைத் தொடங்கும் இடத்தின் ஊா், ஆத்தூா் அருகில் உள்ள தலைவாசல். அவா்கள் பேணி வளா்த்த ஆடு, மாடு, குதிரை, யானைப் போன்றவைகள் வைத்து பராமரிக்கப்பட்ட இடங்கள் ஆட்டையாம்பட்டி, மாட்டையாம்பட்டி, குதிரைக்காரனூா், அத்திக் (யானை) கட்டானூா். இவ்விடத்தின் பெயா்கள் இன்றைக்கும் வழங்கி வருவதை அறியலாம். ஆத்தூா் கோட்டையும் அவா்கள் கட்டியதே.

இவ்விலங்குகளின் மேய்ச்சலுக்காக விட்ட இடமே மேச்சேரி என்றும் கல்வி கற்றுத் தரும் குருவுக்குத் தானமாக தந்த ஊா் குருக்கள்பட்டி. அந்த ஊா்ப்பெயா்கள் கெட்டி வம்ச சிற்றரசா்களின் பெருமைகளை இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது‘ என்றாா்.