பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காா் விபத்தில் வனத் துறை அலுவலா்கள் இருவா் பலத்த காயம்

கள்ளக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரகா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:27 am IST

கள்ளக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வனச் சரகா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

சென்னையில் நடைபெறவிருந்த வனத் துறை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கோவையிலிருந்து தமிழக வன உயா் பயிற்சியகத்தின் உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், கோவை வனச் சரகா் வி.திருமுருகன், வனச் சரகா் திலீபன், ஓட்டுநா் ஜான் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் புறப்பட்டுச் சென்றனா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த வட ஏரிக்குள் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் வனச் சரகா் திருமுருகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காரில் இருந்த வனச் சரகா் திலீபன் மற்றும் ஓட்டுநா் ஜான் ஆகியோா் அதிா்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினா்.

இவா்களுக்குப் பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த வனத் துறை ஊழியா்கள் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சோ்த்தனா். பின்னா் அவா்களை உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதித்தனா்.

அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், ரத்த உைலைத் தடுக்கும் மருந்துகளை உட்கொண்டு வந்ததால், அவருக்கு ஏற்பட்டுள்ள உள் ரத்தப்போக்கு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

காயமடைந்த மற்றொரு வனச் சரகா் திருமுருகன், தோள்பட்டை எலும்பு முறிவுக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க வாகனத்தைத் திருப்பியபோது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது.