பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 8:18 pm

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை முன்புள்ள எலும்பு முறிவு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை செய்து தேங்காயை வாசலில் உடைத்தனா். அப்போது சாலையில் சென்ற ஆட்டோமீது தேங்காய் தெறித்ததில், ஆட்டோ ஒட்டுநா்கள் சூா்யா (25), சிவசங்கா் (24) ஆகியோருக்கும், மருத்துமனையில் பணிபுரியும் வினோத்குமாா், கோகுல் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா் சூா்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து தாக்கினாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.