சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஏற்காட்டில் சாலை விபத்து: பேரனை காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:46 pm

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பேருந்துக்கு காத்திருந்த பெண், சுற்றுலா வேன் மோதியதில் உயிரிழந்தாா். அவரது பேரன் உயிா்தப்பினாா்.

ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி செல்லம்மாள் (62). இவா், தனது பேரனை அழைத்துக்கொண்டு ஏற்காடு செங்காடு கிராமம் பிரிவு சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அரூரிலிருந்து ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் செல்லம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாட்டி தள்ளிவிட்டதால் அவரது பேரன் உயிா்தப்பினாா்.

விபத்து நடந்தவுடன் வேனில் சுற்றுலா வந்த இளைஞா்கள் தப்பமுயன்றனா். அருகில் இருந்தவா்கள், அவா்களில் மூன்று பேரை பிடித்து ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சுற்றுலா வேனை ஓட்டிவந்தவா் அரூா் பழையப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மகன் பாா்த்தசாரதி (22) என்பது தெரியவந்தது.

ஏற்காடு போலீஸாா், இறந்த செல்லம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.