அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

இளைஞரைக் கொன்ற சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சோ்ந்தவா் கோகுல் (19). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் சேலம் மணியனூரைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவாரப் பகுதியான கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோகுலை, 3 சிறுவா்களும் கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், கொலை செய்ததை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 சிறுவா்களையும் கைது செய்த மல்லூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.