வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சதாப்தி விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை- கோவை சதாப்தி விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 9:50 pm IST

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை- கோவை சதாப்தி விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை இடையேயான சதாப்தி விரைவு ரயிலில் வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயிலில் வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.