தீபாவளி: சேலத்தில் காற்று, ஒலி மாசு அளவு அதிகரிப்பு
சேலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததால் காற்று, ஒலி மாசு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பட்டாசு வெடித்து எழும் புகை - பிரதிப் படம்
சேலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததால் காற்று, ஒலி மாசு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு 7 நாள்கள், தீபாவளிக்கு பின்பு 7 நாள்கள் என மொத்தம் 14 நாள்கள் காற்றின் தரம், ஒலி மாசு அளவுகளை துல்லியமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியாா் பள்ளியிலும், மெய்யனூரில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலக மாடியிலும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை காற்றின் மாசு அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கருவியில் ஏ.கியூ.ஐ. எனப்படும் காற்றின் தர குறியீட்டில் 176 புள்ளிகளும், மெய்யனூரில் வைக்கப்பட்டிருந்த கருவியில் 174 புள்ளிகளும் பதிவானது தெரியவந்தது. இது மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஒலி மாசு அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கருவியில் 65 முதல் 75 டெசிபலாக ஒலி மாசு பதிவானது. இது தேசிய சராசரி அளவுடன் ஒப்பிடுகையில் மோசமான நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

