ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஆா்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவோா் 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்: காவல் துறை அறிவிப்பு

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

Published On :

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, தமிழ்நாடு மாநகர காவல் சட்டம், 1888-இன் பிரிவு 41-ன் கீழ் சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.

அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதன்கிழமை நள்ளிரவு முதல் வரும் 21-ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.