வாலிநோக்கத்தில் என்.எஸ்.எஸ். முகாம்
சாயல்குடி, ஜன. 8: சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் கீழக்கரை செய்யது ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் நடத்திய 7 நாள் சேவை முகாமை முன்னிட்டு, கடற்கரையோரம், மரக்கன்றுகள் ந


சாயல்குடி, ஜன. 8: சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் கீழக்கரை செய்யது ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் நடத்திய 7 நாள் சேவை முகாமை முன்னிட்டு, கடற்கரையோரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சனிக்கிழமை நடைபெற்றது.
முகாம் துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அபுல் ஹசன் ஹாதலி தலை மையும், வணிகவியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலையும் வகித்தனர்.என்.எஸ்.எஸ். அலுவலர் செய்யது இப்ராகிம் வரவேற்றார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக, கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சித் துறை தலைவர் ரவிக்குமார் முகாமைத் தொடங்கி வைத்து, பாலிதீன் பைகளால் புவி மற்றும் உயிரினங்கள் அடையும் பாதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கீழக்ரை முகம்மது அறக்கட்டளைத் தலைவர் ஹமீது அப்துல் கா தர், நிர்வாக இயக்குநர் யூசுப், இயக்குநர் ஹபீப் முகம்மது உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். என்.எஸ்.எஸ். அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார்.
முகாமை முன்னிட்டு மருத்துவர்கள் சந்திரசேகர் தலைமையில் கண் பரிசோதனை முகாம், திருமலை வேலு தலைமையில் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம், ஹபிதா நாச்சியார் தலைமையில் அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றன. முகாமில் பேராசிரியரக்ள் நாசர் தலைமையில் கல்வி மேம்பாட்டுக் கருத்தரங்கம், பாலகிருஷ்ணன் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விளக்கக் கருத்தரங்கம், ஆகியவை நடைபெற்றன. கீழக்கரை கடலோர வனத் துறை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் 130 பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.
முகாம் ஏற்பாடுகளை முதல்வர் அபுல் ஹசன் ஹாதலி ஆலோசனையில் என். எஸ்.எஸ்ó. அலுவலர்கள் ஆனந்த், முகம்மது இப்ராகிம், பிரசன்னா, செல்வி ஆகியோர் கவனித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...