ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பழனியில் தீ விபத்து: ரூ.6 லட்சம் பொருள்கள் சேதம்

பழனி, அக். 8: பழனியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குடிசைகள், 2 குடோன்கள் எரிந்ததில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.  பழனி பஸ் நிலையத்தின் பின்புறத்தில் உள்ளது பாளையம்.

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

பழனி, அக். 8: பழனியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குடிசைகள், 2 குடோன்கள் எரிந்ததில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன.

 பழனி பஸ் நிலையத்தின் பின்புறத்தில் உள்ளது பாளையம். இங்கு, ஏராளமான குடிசை வீடுகளும், குடோன்களும் உள்ளன. இப்பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 இதைத் தொடர்ந்து, தீ மளமளவென அருகே இருந்த பகுதிகளுக்கும் பரவியது. இதில், கூலி வேலைக்கு செல்லும் பாண்டியம்மாள், மீனாட்சி, சாந்தாகுமாரி ஆகியோரது குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

 இதனால், வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்துபோயின.

 மேலும், தீ பரவியதில் அருகே இருந்த பழ குடோன் மற்றும் பிளாஸ்டிக் பொருள் கள் வைக்கப்பட்டிருந்த குடோனும் எரிந்தன.

 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள், நகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 இதன் மொத்த சேத மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்பதால், விசாரணை நடைபெற்று வருகிறது.

 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் ராஜமாணிக்கம் (கம்யூனிஸ்ட்), வேலுமணி (திமுக), மகுடீஸ்வரன் (அதிமுக) ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.