ராமநாதபுரம்,அக். 8: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் அ. வேணுகோபாலன் தலைமையும்,பள்ளிச் செயலாளர் டி.ரெத்தினசாமி முன்னிலையும் வகித்து, இருவரும் மாநில அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பேசினர். பள்ளி முதல்வர் கே.மாதவி வரவேற்றார்.
மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர்கள் விவரம்:
சண்டைப்பிரிவு- டி.கோகுலவேல்,எம்.அஜித்குமார் (முதல் பரிசு) கே.சிரஞ்சீவி,ஸ்ரீகுமரன்(2வது பரிசு)
ஏ.முகம்மது பாசில் (3வது பரிசு), கட்டா பிரிவில் எம். தாரிக்குல் ரகுமான் (2வது பரிசு), எம். கிஷோர் (3வது பரிசு) நவீன் என்ற மாணவர் இருபிரிவிலும் வயது அடிப்படையில் முதல்பரிசையும் பெற்று மொத்தம் 8 பேர் பள்ளிக்கும்,மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்தமைக்காக பாராட்டு விழா நடந்தது.
விழாவில் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர்கள்,துணை முதல்வர்கள்,ஆசிரியர்கள்,அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


