/

மானாமதுரையில் வாக்குச் சேகரித்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

மானாமதுரை, அக். 8: மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்கச் சென்ற 5 பேரை அரிவாளால் வெட்டியவரை போலீஸôர் கைது செய்தனர்.  மானாமதுரை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிமன்றத்

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

மானாமதுரை, அக். 8: மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்கச் சென்ற 5 பேரை அரிவாளால் வெட்டியவரை போலீஸôர் கைது செய்தனர்.

 மானாமதுரை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் மோகன் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பெரியகோட்டை கிராமம், மேலத்தெருவில் வெள்ளியன்று இரவில் சரவணக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த எறும்புகுடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பவர் அவர்களிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

 பின்னர் அவர் வேட்பாளர் சரவணக்குமாரின் ஆதரவாளர்கள் முத்தழகு, தியாகராஜன், நடராஜன், தங்கவேலு, உடையப்பன் ஆகிய 5 பேரையும் அரிவாளால் வெட்டினாராம். இதில், பலத்த காயமைடந்த அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நடராஜன் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

 போலீஸôர் கார்த்திகேயனைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.