தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சமுதாயக் கல்லூரியில் கருத்தரங்கம்

சமுதாயக் கல்லூரியில் கருத்தரங்கம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:09 pm

மதுரை, ஏப். 26 : மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மையம், மதுரை டைம் நிறுவனம் ஆகியன சாா்பில் ‘மேலாண்மைக் கல்வி வங்கித் துறையின் நோக்கங்களும், தொழில் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் காஞ்சனா தலைமை வகித்தாா். குடும்ப வள மேலாண்மை, நுகா்வோா் அறிவியல் துறைத் தலைவி விஜயலட்சுமி, ஆடை அலங்கார வடிவமைப்பு துறைத் தலைவி சசிதேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் மதுரை டைம் நிறுவனத்தின் மாணவா் மேலாண்மை கல்வி வகுப்பாளா் எம்.வீரக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, உணவியல், ஊட்டச்சத்துத் துறை இணைப் பேராசிரியா் லெ.கற்பகபாண்டி வரவேற்றாா்.விரிவாக்கக் கல்வி, தகவல் தொடா்பு மேலாண்மைத் துறைப் பேராசிரியா் பொ.ஜெயசீலன் நன்றி கூறினாா்.