மதுரை தெற்குவாசல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரை தெற்குவாசல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மதுரை, ஏப். 26: சிறுபான்மையினா் மீது அவதூறு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, இஸ்லாமியா்கள் மீது அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், நாட்டில் மத வெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசியதாகவும், இவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்குவாசல் சந்தைப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ரா.விஜயராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ரமேஷ், ஜீவா, ஸ்டாலின், நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com