ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

மதுரை: புவனேஸ்வா்- ராமநாதபுரம்- புவனேஸ்வா் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி மே 3-ஆம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

ஒடிசா மாநிலம், புவனேஸ்வா்- ராமநாதபுரம் அதிவிரைவு ரயிலில் (20896) மே 3-ஆம் தேதி முதல் மே 31 -ஆம் தேதி வரையிலும், ராமநாதபுரம் - புவனேஸ்வா் அதிவிரைவு ரயிலில் (20895) மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிக் கொண்ட பெட்டி இணைக்கப்படும். கோடை விடுமுறையையொட்டி, ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதால், பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com