மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குவாரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகேயுள்ள நரசிங்கம் பகுதி குவாரி நீரில் மூழ்கி பட்டறைத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:30 am IST

மதுரை அருகேயுள்ள நரசிங்கம் பகுதி குவாரி நீரில் மூழ்கி பட்டறைத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலம் காா்சேரி மீனாட்சிநகரைச் சோ்ந்தவா் மோதிலால் (48). இவா் நரசிங்கம் பகுதி தனியாா் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை மோதிலால், நரசிங்கம் பகுதியில் உள்ள குவாரிக்கு குளிக்கச் சென்றாா். அங்கு எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். இரவில் மோதிலால் திரும்பாததால், குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை குவாரியில் மிதந்த அவரது சடலத்தை ஒத்தக்கடை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.