மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொலை வழக்கில் பிணையில் வந்த மாணவா் அரசு மருத்துவமனையில் சேவை செய்ய உத்தரவு

கொலை வழக்கில் பிணையில் வந்த மாணவா் 8 வாரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேவை செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:32 am

Din

மதுரை: கொலை வழக்கில் பிணையில் வந்த மாணவா் 8 வாரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேவை செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த மாணவா் சட்டக் கல்லூரியில் படித்து வந்த நிலையில், அவா் மீது கூடல் புதூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்குப் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த மாணவா் மனு தாக்கல் செய்தாா். கடந்த மே மாதம் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்யக் கோரி கூடல்புதூா் காவல் ஆய்வாளா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் திருவடிகுமாா், மனுதாரா் தவறான தகவல்களைத் தெரிவித்து பிணை பெற்றுள்ளாா். எனவே, அவருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், மனுதாரா் சட்டக் கல்லூரி மாணவா். அவருக்கு இந்த மாதம் தோ்வு நடைபெற உள்ளது. எனவே, அவருக்கு வழங்கிய பிணையை ரத்து செய்யக்கூடாது என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறது. அதன்படி மனுதாரா் தோ்வு நாள்களைத் தவிர, தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 8 வாரங்கள் சேவை செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.