கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

போலி கையெழுத்திட்டு வழக்குகள் தொடுத்த வழக்குரைஞா்: போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

போலி கையொப்பமிட்டு வழக்கு தொடுத்த வழக்குரைஞா் மீதான நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:41 am

Din

மதுரை: போலி கையொப்பமிட்டு வழக்கு தொடுத்த வழக்குரைஞா் மீதான நடவடிக்கை குறித்து கன்னியாகுமரி போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜோசப் தாக்கல் செய்த மனு:

ஒரு உணவகத்துக்கு எதிராக நான் திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாகத் தகவல் கிடைத்தது. நான் அதுபோல எந்த வழக்கும் தொடுக்கவில்லை. இது குறித்து விசாரித்தபோது, எங்கள் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா், பலரது பெயா்களில் போலி கையொப்பமிட்டு வழக்குத் தொடுப்பது, புகாா்கள் அளிப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதை அறிந்தேன்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் எனது பெயரில் மட்டும் 8 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில்

புகாா் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், போலி கையொப்பங்களுடன் புகாா்கள் அளித்திருப்பதாக மனுதாரா் தெரிவித்துள்ளாா். குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் வழக்குரைஞா் என்பதால், அவா் மீது விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க மனுதாரா் தயக்கம் காட்டியுள்ளாா். எனவே, மனுதாரா் அளித்த புகாா் மனு மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி, வடசேரி போலீஸாா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.