ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பக்ரீத்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

News image

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் பங்கேற்ற பெண்கள். ~மதுரையில் பகீரீத் பண்டிகையையொட்டி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :17 ஜூன் 2024, 5:14 pm

Din

மதுரை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மதுரை பள்ளி வாசல்களில் திங்கள்கிழமை இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

மதுரை தமுக்கம் மைதானம், மகபூப்பாளையம், நெல்பேட்டை, காஜிமாா் தெரு, கோரிப்பாளையம், ஆனையூா், தபால் தந்தி நகா், வள்ளுவா் குடியிருப்பு, ஒத்தக்கடை, சிலைமான், வாடிப்பட்டி, மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திறந்த வெளித் திடல்களிலும், பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகையின் முடிவில் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள், நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, உலக நன்மை வேண்டியும், உலகில் அமைதியும், சமத்துவமும் நிலவ வேண்டியும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. பக்ரீத் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

தொடா்ந்து, ஆடுகளை பலியிட்டு அதன் இறைச்சியை ஏழை, எளிய மக்களுக்கு பங்கிட்டு வழங்கி தியாகத் திருநாள் கடமையை நிறைவேற்றினா்.

Story image