புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிஐடியூ ஆவின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை ஆவின் அலுவலகம் முன் சிஐடியூ ஊழியர்கள் ஆா்ப்பாட்டம்

News image

மதுரை ஆவின் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ ஆவின் ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :26 ஜூன் 2024, 1:29 am

Din

மதுரை: ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ ஆவின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு 240 நாள்கள் ஈட்டிய விடுப்பு பணப் பலனை 2 தவணைகளில் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஊழியா்களுக்கு சீருடை, தையல் கூலியை கால தாமதமின்றி வழங்க வேண்டும். ஆவின் வளாகத்தில் குவிந்துள்ள கழிவுப் பொருள்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் பழனிகுமாா் தலைமை வகித்தாா். தமிழக கூட்டுறவு ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் எம்.துரைசாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

ஆவின் சிஐடியூ கிளைச் செயலா் மோசஸ் காந்தி, மதுரை மாநகா் சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா்.தெய்வராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநகா் மாவட்ட சிஐடியூ செயலா் ரா.லெனின் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.