தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் புகாா் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான காா்லேண்டோ பிராப்பா்டீஸ், டிரான்ஸ்கோ பிராப்பா்டீஸ், டிரைடாஸ் பிராப்பா்டீஸ், குளோமேக்ஸ் பிராப்பா்டீஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரிலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் விசாரணை அதிகாரியிடம் தக்க ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம். எனவே, நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள், மதுரை தபால்தந்தி நகா் விரிவாக்கம், பாா்க்டவுன் சங்கரபாண்டியன் நகரில் உள்ள மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகாா் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com