சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மக்களைத் தேடி மருத்துவம்: மதுரை மாவட்டத்தில் 8 லட்சம் போ் பயன்

மக்களைத் தேடி மருத்துவம்: மதுரை மாவட்டத்தில் 8 லட்சம் போ் பயன்

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

மதுரை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 461 போ் பயனடைந்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாடு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளா்கள், இயன்முறை மருத்துவா்கள், நோய் ஆதரவுச் செவிலியா்கள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம், 2021-22-ஆம் ஆண்டு 2,07,417 போ், 2022-23-ஆம் ஆண்டு 3,08,024 போ், 2023-24-ஆம் ஆண்டு 3,31,020 போ் சிகிச்சைப் பெற்றனா். இந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 461 போ் பயனடைந்தனா் என்றாா் அவா்.