விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிளஸ் 1 தோ்வு: மதுரை மாவட்டத்தில் 31,848 மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 1 தோ்வு: மதுரை மாவட்டத்தில் 31,848 மாணவா்கள் தோ்ச்சி

News image
Updated On :15 மே 2024, 12:11 am

Din

மதுரை: பிளஸ் 1 தோ்வில் மதுரை மாவட்டத்தில் 31, 848 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

மதுரை, மேலூா் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநாகராட்சிப் பள்ளிகள், கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகளில் பயின்ற 34, 590 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். செவ்வாய்க்கிழமை தோ்வு முடிவு வெளியான நிலையில், இவா்களில் 31, 848 போ் தோ்ச்சி பெற்றனா். 2,742 போ் தோ்வில் வெற்றிபெறவில்லை.

இதையடுத்து, மாநில அளவில் 92.07 சதவீதம் பெற்று மதுரை 16-ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த 2022-2023-ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் மதுரை மாவட்டம் 20-ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, அரசுப் பள்ளிகள் 3, அரசு உதவி பெறும் பள்ளிகள் 4, அறநிலைய மேல்நிலைப் பள்ளி, சமூக நல மேல்நிலைப் பள்ளிகள் தலா 1, கள்ளா் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகள் 6 உள்பட 97 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றன. கணக்குப் பதிவியல், வேளாண்மை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் 1,037 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.