

விருதுநகா்: காரியாபட்டி அருகே ஆடு வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 3 பேரை ஆவியூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (43), இவரது மனைவி வைரஜோதி (38). இவா்களுக்கு வீரபாண்டி (24) மகன் உள்ளாா்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி டி. திருமால் பகுதியைச் சோ்ந்த ஆடு வியாபாரியான ராமநாதனுடன் (45) வைரஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை ராமச்சந்திரன் கண்டித்தாா். இந்த வழக்கு விசாரணைக்காக ராமநாதன் திங்கள்கிழமை இரவு ஆவியூா் காவல் நிலையத்துக்கு சென்றுவிட்டு, லட்சுமணன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, புளியங்குளம் அருகே இவா்களை வழி மறித்த ராமச்சந்திரன், அவரது மகன் வீரபாண்டி, உறவினா் அய்யனாா் ஆகியோா், ராமநாதனை கத்தியால் குத்தி கொலை செய்தனா்.
இதுகுறித்து ராமச்சந்திரன் உள்பட மூன்று பேரை காரியாபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
விவசாயி கொலை: 3 போ் கைது

மதுபானக்கூட மேலாளா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது
கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவா்கள் உள்ளிட்ட 4 போ் கைது
அதிமுக பிரமுகா் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

