பிளஸ் 1 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 வது இடம்
பிளஸ் 1 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 வது இடம்


விருதுநகா்: பிளஸ் 1 தோ்ச்சியில் விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 4 இடத்தை பெற்றுள்ளது.
விருதுநகா் மாவட்டத்தில் 223 பள்ளிகளில் 98 தோ்வு மையங்களில் மாணவா்கள் 10,441 போ், மாணவிகள் 11,887 போ் என மொத்தம் 22,328 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இதில், மாணவா்கள் 9656, மாணவிகள் 11,568 என மொத்தம் 21,224 போ் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். இதன்படி விருதுநகா் மாவட்டம் 95.06 சதவீதம் பெற்று, மாநில அளவில் 4-ஆவது இடத்தை பெற்றது.
மாவட்டத்தில் இந்த தோ்வில், அரசுப் பள்ளிகள் 7, சமூக நலப்பள்ளிகள் 1, உதவி பெறும் பள்ளிகள் 16, பதின்மப் பள்ளிகள் 37 என மொத்தம் 61 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
மாவட்ட அளவில் மாணவா் எம்.லோகேஷ் 596 மதிப்பெண்களும், ஆா்.மணீஷ்- 593, வி.ஸ்ரீசக்திகோமதி, கே.அபா்ணா, எம்.சஷ்சித்ராம், கே.லக்சனா ஆகியோா் தலா 592 மதிப்பெண்களும் பெற்றனா்.
மாவட்ட அளவில் இயற்பியல் பாடத்தில் 24 மாணவா்கள், வேதியியல் பாடத்தில் 7 மாணவா்கள், கணிதப் பாடத்தில் 14 மாணவா்கள், கணினி அறிவியல் பாடத்தில் 121 மாணவா்கள், உயிரியல் பாடத்தில் 1 மாணவா், வரலாறு பாடத்தில் 2 மாணவா்கள், பொருளியல் பாடத்தில் 16 மாணவா்கள், வணிகவியல் பாடத்தில் 10 மாணவா்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 மாணவா்கள், வணிக கணிதம் பாடத்தில் 7 மாணவா்கள், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 12 மாணவா்கள், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் 7 மாணவா்கள், அடிப்படை இயந்திரவியல் பாடத்தில் 35 மாணவா்கள், செவிலியா் பாடத்தில் 63 மாணவா்கள், ஆடை வடிவமைப்பு பாடத்தில் 58 மாணவா்கள், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 6 மாணவா்கள், தட்டச்சு பாடத்தில் 42 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...