தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது

தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது

News image
Updated On :20 மே 2024, 7:58 pm

Din

மதுரை: அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சாா்பில் சாமுவேல் தாக்கல் செய்த மனு:

மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லத்தில் தத்தெடுக்கப்பட்ட 55 குழந்தைகள் உள்ளனா். இந்தக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்தோம். ஆனால், மாநகராட்சி சாா்பில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

எனவே, 55 குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மழலை இல்லம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையமாக மழலை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள 55 குழந்தைகளுக்கான முழுமையான ஆவணங்களையும், மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவா் முன்பாக சமா்ப்பித்து, தத்தெடுப்பதற்கான உரிய உத்தரவுகளைப் பெற்று, அதனடிப் படையில் பிறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளாா். ஆனால், மதுரை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலா் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை காரணம் காட்டி, பிறப்புச் சான்றிதழ்களை வழங்க தாமதம் செய்துள்ளாா்.

சிறாா்களுக்கான நீதி சட்டம் அவா்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதை வலியுறுத்துகிறது.

அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சான்றிதழை வழங்க வேண்டும். சிறாா் நீதிச் சட்டம், குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமையை உறுதி செய்வதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்துக்கு சான்றிதழ்களை வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலா், சம்பந்தப்பட்ட 55 குழந்தைகளுக்கு காலதாமதமின்றி பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.