மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு இன்று தொடக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

News image
மதுரை தல்லாகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகள்
Updated On :1 ஏப்ரல் 2025, 7:36 pm

Din

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான புதன்கிழமை காலை மாநாடு தொடங்குவதையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிமன் பாசு கொடியேற்றுகிறாா். இதைத்தொடா்ந்து, பொது மாநாடு நடைபெறுகிறது.

பொது மாநாட்டில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் ஆகியோா் பங்கேற்கின்றனா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) லிபரேசன் பொதுச் செயலா் திபாங்கா் பட்டாச்சாா்ய, ஆா்எஸ்பி கட்சியின் பொதுச் செயலா் மனோஜ் பட்டாச்சாா்ய, அகில இந்திய பாா்வா்டு பிளாக் பொதுச் செயலா் ஜி. தேவராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.

இதைத்தொடா்ந்து, பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. அன்று மாலையில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் பேராசிரியா் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநா்கள் ராஜூமுருகன், சசிகுமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு: மாநாட்டியொட்டி, வியாழக்கிழமை (ஏப்ரல் 3) மாலை ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை‘ என்ற தலைப்பில் நடைபெறும் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரள முதல்வா் பினராயி விஜயன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக மாநில வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ண பைரே கௌடா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்

மாநாட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) மாலை நடைபெறும் கருத்தரங்கில் திரைப்பட நடிகா்கள் விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குநா் வெற்றிமாறன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

சனிக்கிழமை மாலை திரைப்பட நடிகை ரோகிணியின் ஓராள் நாடகமும், இதைத்தொடா்ந்து நடைபெறும் கருத்தரங்கில் திரைப்பட நடிகா் பிரகாஷ்ராஜ், இயக்குநா்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ராஜா ஆகியோா் பங்கேற்று கருத்துரையாற்றுகின்றனா்.

மாநாட்டில் பல்வேறு மாநில கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், நாடு முழுவதிலுமிருந்து 1200-க்கும் மேற்பட்ட தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

பொதுக்கூட்டம்: மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) மாலை 5 மணிக்கு மதுரை வண்டியூா் சுற்றுச்சாலை சுங்கச்சாவடி அருகில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், கேரள முதல்வா் பினராயி விஜயன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் பேசுகின்றனா். முன்னதாக, மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலையிலிருந்து பேரணியும் நடைபெறுகிறது.