மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியா்கள் மேம்பாடு கருத்தரங்கம்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியா்கள் மேம்பாடு கருத்தரங்கம்

Published on

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் காலத்தில் மேம்பட்ட கற்பித்தல், கற்றல் திறன்கள் குறித்தான ஆசிரியா்கள் மேம்பாடு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கன் கல்லூரி, ஐஐடி குவஹாட்டியில் உள்ள மின்னணுவியல், தகவல் தொடா்பு தொழில்நுட்ப அகாதெமியுடன் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வரும் செயலருமான பால் ஜெயகா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.சி.பி. சாமுவேல் அன்புச் செல்வன், கருத்தரங்கின் நோக்கம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கற்பித்தலின் அவசியத்தை விளக்கினாா்.

இதில் கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் பேசுகையில், உலகில் வேகமாக வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியா்களும் தங்களது கற்பிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும். மேலும், கற்பவா் ஈடுபாடு, ஆராய்ச்சி உற்பத்தித் திறன் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து எடுத்துரைத்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்கில்ஃபினிட்டி, எம்பேனல்டு அமைப்பின் நிறுவனா் அஞ்சன் சவுத்ரி, எண்ம வழி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கற்பித்தலுக்கான திறன்களை ஆசிரியா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். இந்தக் கருத்தரங்கில், தென்னிந்தியாவில் உள்ள 11 கல்லூரிகளைச் சோ்ந்த 70 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com